பெண்ணின் நாசித் துவாரத்தினுள் கரப்பான் பூச்சி; 12 மணிநேரத்தின் பின் உயிருடன் வெளியேற்றம்

Published By: Devika

03 Feb, 2017 | 12:10 PM
image

சென்னைப் பெண் ஒருவரது நாசித் துவாரத்தினுள் சென்ற கரப்பான் பூச்சி, பன்னிரண்டு மணிநேரம் கழித்து உயிருடன் வெளியே எடுக்கப்பட்டது.

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வி (42). கடந்த செவ்வாயன்று காலை கண்விழித்த செல்வி, மூக்கினுள்ளே கடும் அரிப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தார்.

முதலில், தடிமன் காரணமாக இருக்கலாம் என்று செல்வி நினைத்தார். ஆனால், அரிப்பை ஏற்படுத்தும் அந்த வஸ்து நெளிவதையும், நகர்வதையும் உணர்ந்ததால் உடனடியாக செல்வி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மூன்று தனியார் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், சிகிச்சையளிக்க முடியாதெனக் கைவிடப்பட்ட நிலையில் நான்காவதாக ஸ்டான்லி அரச வைத்தியசாலைக்கு செல்வி எடுத்துச் செல்லப்பட்டார்.

அவரது நாசித் துவாரத்தை ஸ்கேன் மூலம் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நாசித் துவாரத்தினுள், முழுமையாக வளர்ந்த கரப்பான் பூச்சி ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும், செல்வியின் கண்களுக்கும் மூளைக்கும் இடைப்பட்ட இடத்தில் அது நின்றுகொண்டிருப்பதையும் அறிந்தனர்.

இதையடுத்து, சுமார் நாற்பத்தைந்து நிமிடப் போராட்டத்தின் பின், மூக்கினுள் இருந்த கரப்பான் பூச்சி உயிருடன் ‘மீட்கப்’பட்டது!

இதுவரை பொத்தான்கள், அட்டை, வெண்கட்டித் துண்டுகள் போன்றவற்றை நாசித் துவாரத்தினுள் இருந்து எடுத்திருக்கிறோமே தவிர, ஒரு கரப்பான் பூச்சியை, அதுவும் இவ்வளவு பெரிய கரப்பான் பூச்சியை, அதுவும் உயிருடன் வெளியே எடுத்ததில்லை என்று செல்விக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right