உயர்­த­ரப்­ப­ரீட்சை பெறு­பே­று­க­ளின்­படி வர்த்­தக பிரிவில் முத­லி­டத்தை குரு­நாகல் மலி­ய­தேவ வித்­தி­யா­ல­யத்தை சேர்ந்த எப்.எம் அகில் மொஹமட் என்ற மாணவர் அகில இலங்கை ரீதியில் முத­லிடம் பெற்­றுள்ளார். இரண்டாம் இடத்தை சதனி ரங்கா கொழும்பு தேவி பாலிக்கா கல்­லுரி மாணவி பெற்­றுள்ளார். மூன்றாம் இடத்தை மொரட்­டுவ புனித செபஸ்ட்­டியன் கல்­லூரி மாணவன் ரன்தி ரமேஷ் பெற்­றுள்ளார்.

2015 ஆண்­டுக்­கான க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நேற்று வெளி­யி­டப்­பட்ட நிலையில் கணிதப் பிரிவில்

கொழும்பு றோயல் கல்­லூரி மாண­வனும் விஞ்­ஞா­னப் பிரிவில் கம்­பஹா ரட்­னா­வெலி

மகளிர் வித்­தி­யா­லய மாண­வியும் முதலாம் இடத்தை பிடித்­துள்­ளனர்.

வெளி­யி­டப்­பட்­டுள்ள உயர்­த­ரப்­ப­ரீட்சை பெறு­பேறு­க­ளின்­படி கணி­தப்­பி­ரிவில் கொழும்பு ரோயல் கல்­லூ­ரியின் தசுன் ஜெய­சிங்க என்ற மாணவர் முத­லிடம் பெற்­றுள்ளார். விஞ்­ஞா­னப்­பி­ரிவில், கம்­பஹா ரட்­னா­வெலி மகளிர் வித்­தி­யா­லய மாணவி தெபுலி உமேஷா கரு­ணா­வல்பா முத­லிடம் பெற்­றுள்ளார்.

உயர்­தரப் பரீட்சை முடி­வு­களின் படி கலைப்­பி­ரிவில் குரு­ணாகல் மலி­ய­தேவ மகளிர் வித்­தி­யா­ல­யத்தின் மாணவி ஜீவா நய­ன­மாலி முத­லிடம் பெற்­றுள்ளார். அத்­துடன் பொறி­யியல் பிரிவில் மாத்­தளை மாவட்­டத்தின் புனித தோமியன் கல்­லூரி மாணவன் சானக அநு­ராத முதலாம் இடத்தை பெற்­றுள்ளார்.

இதே­வேளை தொழில்­நுட்­ப­வியல் பிரி வில் இரண்டாம் இடத்தை யாழ்ப்­பாண மாவட்டம் யாழ். புனித ஜோன்ஸ் கல்­லூரி

ன் கரு­னை­நா­யகம் ரவீ­கரன் பெற்­றுள்ளார். பொறி­யியல் பிரிவில் மூன்றாம் இடத்தை யாழ்­பாண மாவட்டம் யாழ். இந்து கல்­லூ­ரி­யினை சேர்ந்த மாணவன் பால­சுப்­ர­ம­ணியம் ஞான­கீதன் பெற்­றுள்ளார்.

கணித பிரிவு

கணித பிரிவில் கொழும்பு ரோயல் கல்­லூ­ரியின் தசுன் ஜெய­சிங்க என்ற மாணவர் முத­லிடம் பெற்­றுள்ளார். இரண்டாம் இடத்தை குரு­நாகல் மல்­லி­ய­தேவ ஆண்கள் கல்­லூரி மாணவன் நதீஷான் தனன்­ஜய பெற்­றுள்ளார். மூன்றாம் இடத்தை இரத்­தி­ன­புரி சீவலி மத்­திய மகா வித்­தி­யா­லய மாணவன் சவித் நில்­மன்த்த பெற்­றுள்ளார்.

தொழில்­நுட்­ப­வியல் பிரிவில்

வெளி­யி­டப்­பட்­டுள்ள கல்விப் பொதுத் தரா­தர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி தொழில்நுட்பவியல் பிரிவில் பண்டாரவளை தர்மபால மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி வாசனா நவோதனி முதல் இடத்தை பெற்றுள்ளார், இரண்டாம் இடத்தை யாழ்பாண மாவட்டம் யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மாணவன் கருனைநாயகம் ரவீகரன் பெற்றுள்ளார்.

விஞ்­ஞானப் பிரிவில்

வெளி­யி­டப்­பட்ட கல்­விப்­பொ­துத்­த­ரா­தர உயர்­த­ரப்­ப­ரீட்சை பெறு­பே­று­க­ளின்­படி விஞ்­ஞா­னப்­பி­ரிவில், கம்­பஹா ரட்­னா­வெலி மகளிர் வித்­தி­யா­லய மாணவி தெபுலி உமேஷா கரு­ணா­வல்பா முத­லிடம் பெற்­றுள்ளார். இரண்டாம் இடத்தை புத்­தளம் ஜனா­தி­பதி கல்­லூரி முஸ்லிம் மாணவன் ஜே.எம்.மொஹமட் முன்சீப் தமிழ் மொழி பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்­றுள்ளார் மூன்றாம் இடத்தை கொழும்பு விசாகா மகளீர் கல்­லூரி மாணவி யசஸ்வி வத்­சலா பெற்­றுள்ளார்.

வர்த்­தக பிரிவில் 

உயர்­த­ரப்­ப­ரீட்சை பெறு­பே­று­க­ளின்­படி வர்த்­தக பிரிவில் முத­லி­டத்தை குரு­நாகல் மலி­ய­தேவ வித்­தி­யா­ல­யத்தை சேர்ந்த எப்.எம் அகில் மொஹமட் என்ற மாணவர் அகில இலங்கை ரீதியில் முத­லிடம் பெற்­றுள்ளார். இரண்டாம் இடத்தை சதனி ரங்கா கொழும்பு தேவி பாலிக்கா கல்­லுரி மாணவி பெற்­றுள்ளார். மூன்றாம் இடத்தை மொரட்­டுவ புனித செபஸ்ட்­டியன் கல்­லூரி மாணவன் ரன்தி ரமேஷ் பெற்­றுள்ளார்.

கலைப்­பி­ரிவில்

கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வு­களின் படி கலைப்­பி­ரிவில் குரு­ணாகல் மலி­ய­தேவ மகளிர் வித்­தி­யா­ல­யத்தின் மாணவி ஜீவா நய­ன­மாலி முத­லிடம் பெற்­றுள்ளார். இரண்டாம் இடத்தை கண்டி புஷ்­ப­தான மகளீர் கல்­லூரி மாணவி நிராஷா நதீ­ஷானி பெற்­றுள்ளார். மூன்றாம் இடத்தை கொழும்பு 07, சீ.எம்.எஸ்.மகளீர் கல்­லூரி மாணவி பாத்­திமா அம்ரா பெற்­றுள்ளார்.

பொறி­யியல் பிரிவில்

வெளி­யி­டப்­பட்­டுள்ள கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வு­களின் படி பொறி­யியல் பிரிவில் மாத்­தளை மாவட்­டத்தின் புனித தோமியன் கல்­லூரி மாணவன் சானக அநு­ராத முதலாம் இடத்தை பெற்­றுள்ளா.ர்.; இரண்டாம் இடத்தை கொழும்பு ஆனந்தா கல்­லூரி மாணவன் இஷார புந்­திக்க பெற்­றுள்ளார், மூன்றாம் இடத்தை யாழ்­பாண மாவட்டம் யாழ். இந்து கல்­லூ­ரி­யினை சேர்ந்த மாணவன் பால­சுப்­ர­ம­ணியம் ஞான­கீதன் பெற்­றுள்ளார்.