அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த அதிர்ச்சி..!

Published By: Selva Loges

03 Feb, 2017 | 11:44 AM
image

12000 கி.மீ தூரத்திற்கு 10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை ஒன்றை சீனா செய்துள்ளது. இதனால் அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் பாதுகாப்புதுறைக்கு  அதிகளவான நிதியை ஒதுக்கிவரும் சீனா,  10 அணுகுண்டுகளுடன் சுமார் 12000 கி.மீ தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணையை பரிசீலித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

குறித்த பரிசோதனையானது மத்திய சீனாவிலுள்ள தையுவான் விண்வெளி நிலையத்திலிருந்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பரிசோதனை முடிவுகள் பற்றிய தரவுகள் வெளியாகவில்லை. 

மேலும் சீனாவின் குறித்த பரிசோதனையால், அமெரிக்க பாதுகாப்பு தரப்பான பெண்டகன் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், தொடர்ந்து சீனாவை கண்காணிப்பில் வைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், குறித்த ஆய்வு பற்றி கூறியுள்ள சீன தரப்பு: பரிசோதனையை  நடத்துவதற்கு சீன மத்திய ராணுவ ஆணையத்தின் முன் அனுமதியை பெறுவதற்கு ஒரு வருடம் காத்திருந்த பிறகே, குறித்த பரிசோதனை இடம்பெற்றதாகவும், மாறாக டிரம்பின் பதவி ஏற்பை தொடர்ந்து தாம் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

சீனா டிஎப்-5சி  எனும் ஏவுகணையையே சோதித்துள்ளதாகவும், இதற்கு முன் பரிசோதித்த டிஎப்-5பி ஏவுகணை சோதனையின் போது 250 அணுகுண்டுகள், சீனாவிடம் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அண்மைய பரிசோதனைகளுக்கு பிறகு, சீனா அதிக அணுகுண்டுகள் வைத்துள்ளமை வெளிப்பட்டுள்ளமையே, அமெரிக்காவின் அதிர்ச்சிக்கு காரணமாகும் என குறித்த ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17