Lepromatous என்ற தொழுநோயிற்குரிய சிகிச்சை

Published By: Robert

03 Feb, 2017 | 11:31 AM
image

தொழு நோய் ஒரு வகை கிருமியால் வருகிறது. காற்றின் மூலம் பரவுகிறது. ஏறக்குறைய 3 ஆண்டுகள் இனப்பெருக்கத்திற்கு பின் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அது முக்கியமாக தோலையும், நரம்புக்களையும் பாதிக்கிறது. அதனால் மூக்கு சப்பையாகி, காதுமடல் தடித்து, கைவிரல்கள், கால்விரல்கள் மடங்கி போய் குறைந்து போதல் போன்ற ஊனங்கள் ஏற்பட்டு அவலட்சணமான தோற்றமுடையவர்களாக மாறிவிடுகிறார்கள். தகுந்த தோல் நோய் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, தொடர் சிகிச்சையைப் பெற்றால். இதனை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே குணப்படுத்திவிடலாம்.

தொழுநோய்களில் இரண்டு வகையிருக்கிறது. அதில் உணர்ச்சியற்ற தேமல் போன்ற தொழு நோய் (Tuberculoid) குறித்த விழிப்புணர்வை மட்டுமே மக்கள் பெற்றிருக்கிறார்கள். இந்நோய் யாருக்கும் பரவாது.  Lepromatous என்ற தொழுநோயின் மற்றொரு வகையைக் குறித்து யாருமே அறிந்திருக்கவில்லை. இதற்கான அறிகுறி எளிதில் தெரியாது. இது உடலெங்கும் பரவிய பின்னர் தான் கைகளிலும் கால்களிலும் உணர்ச்சியை குறையவைத்து தன்னுடைய அறிகுறியை வெளிப்படுத்தும். இதனை யாரும் அவ்வளவு எளிதாக கண்டறிவதில்லை. உடலில் இருக்கும் மைக்ரோபாக்டீரீம் என்ற ஒருவகையான வைரஸ் கிருமிகளால் இவை பரவுகிறது.

புருவ முடிகள் உதிர்ந்து போகுதல், எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பான மினுமினுப்பான தோல் தோற்றம், காதின் பின் பகுதி (மடல்) லேசாக தடித்து இருத்தல், குதிக்காலில் பெரிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டு அவை பின்பக்கமாக கணுக்காலை நோக்கி இருத்தல் இவையெல்லாம் பரவும் தன்மைக் கொண்ட Lepromatous என்ற தொழுநோயின் அறிகுறிகளாகும். 

அதனால் இத்தகைய அறிகுறிகளுடன் இருப்பவர்கள் மருத்துவர்களையோ அல்லது தோல் மருத்துவ நிபுணர்களையோ சந்தித்து ஆலோசனைப் பெறவேண்டும். தொழுநோய் என்று உறதிப்படுத்தப்பட்டால், இவர்கள், தினமும் மூன்று மாத்திரைகள் வீதம் ஒரு வருடம் வரை சாப்பிட்டு மீண்டும் பரிசோதனை செய்து ,நோயின் கட்டுப்பாடு குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இதைத் தான் மல்டி டிரக் தெரபி என்கிறார்கள். இவ்வகையான சிகிச்சையைத் தொடர்ந்தால் இந்நோயை முழுமையான அளவில் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

டொக்டர் செந்தில்குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04