டுபாயில் பணியாற்றிவந்த இந்தியர் ஒருவருக்கு லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு கிடைத்திருக்கிறது. 

ஷார்ஜாவில் மத்திய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அதிகார சபையில் களஞ்சியசாலைப் பொறுப்பாளராகப் பணியாற்றிவந்த அஜேஷ் பத்மநாபன் என்பவருக்கே இந்தப் பரிசு கிடைத்துள்ளது.

டுபாயின் ‘ட்யூட்டி ஃப்ரீ’ அமைப்பு ‘மில்லேனியம் மில்லியனர்’ என்ற பெயரில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றை நடத்தி வருகிறது. நேரடியாகவும் இணையதளம் மூலமாகவும் இதில் டிக்கெட்டுகளை வாங்க முடியும்.

இந்த லொத்தர் சீட்டிழுப்பில் தொடர்ச்சியாகப் பங்கேற்றும் பழக்கம் உள்ளவர் அஜேஷ். அதன்படி கடந்த மாதத்துக்கான சீட்டிழுப்பில் இணையதளம் வாயிலாக அஜேஷும் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். சீட்டிழுப்பில் அவரது சீட்டு தெரிவானது. இதையடுத்து முதல் பரிசுத் தொகையான ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் பதினைந்து கோடி ரூபா) அஜேஷுக்குக் கிடைத்துள்ளது.

தனது தொடர் முயற்சிக்கு மில்லேனியம் மில்லியனர் லொத்தர் போட்டி பரிசு அளித்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் அஜேஷ்!