(எம்.எம்.மின்ஹாஜ்)

மக்­க­ளுக்கு சலுகை வழங்கும் நோக்­குடன் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அரி­சிக்கான வரிகள் அனைத்­தையும் நீக்­கி­யுள் ளோம். இதன் பய­னாக தற்­போது சந்­தை யில் ஒரு கிலோ கிராம் அரி­சியை 66 ரூபா­ வாக விற்க முடியும். ஆனால் வர்த்­த­கர்­க­ளினால் அரி­சியின் விலை இது­வ­ரையில் குறைக்­கப்­பட வில்லை. இது பெரும் அநீ­தி­யாகும். ஆகவே மக்­களின் மீது அக்­கறை கொண்டு களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அரி­சியை புதிய விலையின் பிர­காரம் உட­ன­டி­யாக விற்­பனை செய்­யு­மாறு நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வர்த்­த­கர்­க­ளிடம் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் அரிசி தட்­டுப்­பாடை போக்கும் வகையில் 23 ஆயி­ரத்து 800 மெட்ரிக் டொன்  அரிசி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் அரிசி இறக்­கு­மதி செய்­யப்­படும். தட்­டு­பாட்டின் கார­ண­மாக உயர்ந்­துள்ள அரி­சியின் விலையை குறைக்கும் நோக்­குடன் அரிசி மீதான அனைத்து வரி­க­ளையும்  நீக்­கி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

நிதி அமைச்சில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் அரிசி தட்­டுப்­பாடு பெரு­ம­ளவில் அதி­க­ரித்­துள்­ளது. இதன்­கா­ர­ண­மாக அரிசி விலையும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே நாட்டு மக்­க­ளுக்கு குறைந்த விலையில் அரி­சியை பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் வெளி­நாட்­டி­லி­ருந்து அரி­சியை இறக்­கு­மதி செய்ய திட்­ட­மிட்டோம். இதன்­பி­ர­காரம் தற்­போது இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அரிசி நான்கு நாட்­க­ளுக்கு முன்­பா­கவே சந்­தைக்கு விநி­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளது. 

மக்­களின் நல­னுக்­காக இறக்­கு­மதி வரி உள்­ளிட்ட அனைத்து வித­மான வரி­க­ளி­லி­ருந்து அரிசி இறக்­கு­ம­தியை விலக்­க­ளித்தோம். ஆகையால் குறித்த வரி விதிப்­புகள் நீங்­க­லாக ஒரு கிலோ கிராம் அரி­சியை 66 ரூபா­விற்கு தற்­போ­தைக்கு விற்­பனை செய்ய முடியும். ஆகவே குறைந்­த­ளவில் அரிசி விற்­பனை செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அர­சாங்கம் எடுத்­தி­ருந்தும் வர்த்­த­கர்கள் குறித்த நிவா­ர­ணத்தை மக்­க­ளுக்கு இன்னும் வழங்­க­வில்லை. 

ஆகவே அர­சாங்கம் என்ற வகையில் நாம் செய்ய வேண்­டிய காரி­யத்தை செய்த போதிலும் இன்னும் வர்த்­த­கர்­க­ளினால் மக்­க­ளுக்கு போய் சேர வேண்­டிய சலுகை செல்­ல­வில்லை. ஆகவே தயவு செய்து வர்த்­த­கர்கள் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அரி­சியை    புதிய விலையின் பிர­காரம் நுகர்­வோ­ருக்கு வழங்க வேண்டும்.

ஏற்­க­னவே 76 ரூபா­வாக குறைக்­கப்­பட்ட அரி­சியின் விலையை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தலை­யிட்டு வரிகள் விலக்­க­ளிக்­கப்­பட்­டதன் பின்னர் மேலும் 10 ரூபா குறைக்­கப்­பட்­டது. இதன்­பி­ர­காரம் தற்­போது ஒரு கிலோ கிராம் அரி­சியின் விலை 66 ரூபா­வாக குறைக்­கப்­பட வேண்டும் கணிப்­பி­டு­கின்றேன் என்றார்.

கேள்வி   தற்போது ஒரு கிலோக கிராம் அரிசியின் விலை எத்தகையதாக அமைய வேண்டும்?

பதில்  மன்னிக்கவும். இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. இந்த கேள்வியை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரிடமே கேட்க வேண்டும் என்றார்.