இன்று காலை இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலமான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கு பகுதியில் 55 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பங்களதேசஷின் மேற்கு பகுதியிலும்,மியன்மாரிலும்  மற்றும் இந்தியாவின் மற்ற வடக்கிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. 

6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் இந்தியாவில் ஒருவர் பலி மற்றும் 16 பேர் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.