தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் டேவிட் மில்லர் இலங்கை அணிக்கெதிரான எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவரது கைவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இரண்டாவது போட்டியில் மில்லர் 98 பந்துகளுக்கு 117 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்நிலையில் மில்லருக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் பஹார்டீன் அணியில் இணைத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.