அரசியல் பட்டப்படிப்புடன் கோத்தாவின் அரசியல் பிரவேசம் : எதிர்க்கும் முன்னாள் ஜனாதிபதி  

Published By: Selva Loges

02 Feb, 2017 | 08:46 PM
image

சீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன்,  அடுத்த ஜனாதிபதி தேர்தலில்  கோத்தபாய ராஜபக்ஷவின், அரசியல் பிரவேசம் இருக்குமென்றால் அவரது வெற்றி நிச்சயமாகிவிடும். இருப்பினும் அவரது அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரர் விரும்பவில்லையென முன்னாள் வெளியுறவு தூதுவராக இருந்த கலாநிதி தயான் ஜெயதிலக கருத்து பகிர்ந்துள்ளார். 

மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி  தேர்தலை குறிவைத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ  சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய, அரசியல் தேர்ச்சிக்கான பயிற்சி இல்லை என்றாலும் வெற்றி வாகை சூடுவார். அவரது ஆட்சிக்காலம், இலங்கையை வளர்ச்சி மிகு பாதைக்கு இட்டு செல்லும் என்பதில் தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு பாதுகாப்பு தரப்பு கோத்தாவின் பக்கம் இருப்பர் எனும் வகையில் தனது எதிர்வு கூறலை வெளிப்படுத்தியுள்ளார்.  

இந்நிலையில் கோத்தபாய அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அரசியல் பிரவேசத்திற்கான பணிகளை செய்த போது அவரது சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு, மீறி அரசியலில் பிரவேசித்தால் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும். என எச்சரிக்கை விடுத்ததாகவும்  தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39