(லியோ நிரோ தர்ஷன்)

நிலையான நீரியல் வள ஒத்துழைப்புகள் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைவாக இரண்டு இலங்கையர்களுக்கு முதுமானிப் பட்டப் படிப்பை பிரான்சில் மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 

இதற்கு அமைவாக தேசிய நீர்ப்பாசன தினைக்களத்தின் மேல் மத்திய பிராந்தியத்தின் பணிப்பாளர் நிஷாந்த சுரன்ஜித் மற்றும் இணைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் டிஷ்னா பன்னில ஆகியோருக்கு புலமைப்பரிசில் கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் மறான் சூ இந்த புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார். அபிவிருத்திற்கான பிரான்ஸ் முகவர் அமைப்பு புலமைப்பரிசில் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மேற்படி பட்டப்படிப்பிற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் சங்கப்பூர் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.