டொனால்ட் டிரெம்பின் முன்னிலையில் ஊடகவியலாளர் ஒருவரை  நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறி அவரது ஆதரவாளர் ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து வெளியேற்றிய சம்பவம் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற போதிலும், அமெரிக்க ஜனாதிபதியாக டிரெம்ப் பதவியேற்ற நிலையில் அக்காணொளி மீண்டும் சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இச் சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இடம்பெற்றுள்ளது. இருந்த போதிலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரெம் பதவியேற்று அமெரிக்காவில் முன்னெடுத்துவரும் குடியேற்றத் தடைகளையடுத்து குறித்த காணொளி இணையத்தளங்களில் மிகவேகமாக பரவிவருகின்றது.

குறித்த காணொளியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முன்வராத தற்போது அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் டிரெம்ப்இ அவரை இருக்கையில் அமருமாறு கூறுகிறார். இருப்பினும் ஊடகவியலாளர் மறுபடியும் மறுபடியும் கேள்விகளை தொடுக்கஇ தனது ஆதரவாளர்  பார்த்து சைகை மூலும் வெளியேற்றுமாறு டிரெம்ப் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஊடகவியலாளரின் அருகில் சென்ற ஆதரவாளரொருவர் அவரை வெளியில் செல்லுமாறும் நாட்டை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி 45 ஆவது அமெரிக்க ஜனாதிபதியா டிரெம்ப் பதிவியேற்ற நிலையில் பல அதிரடி மாற்றங்கள் மற்றும் அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்ற நிலை குறித்த காணொளி சமூகவலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் பெரும்  வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது