புள்ளிகளை கடனாகப்பெற்று சித்தியடையலாம்: சீனாவில் புதிய வங்கி!

Published By: Selva Loges

02 Feb, 2017 | 04:26 PM
image

சீனாவின் நான்ஜிங் பிராந்தியத்திலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்காக ‘புள்ளிகள் வங்கி’ ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வங்கியினூடாக மாணவர்கள் புள்ளிகளைக் கடனாகப் பெற்று தமது பரீட்சைகளில் சித்தியடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் மூலம் அடுத்து வரக்கூடிய பரீட்சைகளில் அதிக புள்ளிகளைப் பெற்று, முன்பு பெற்ற கடனைத் திருப்பி கொடுக்க வேண்டும். 

மேலும்  இத்திட்டத்திற்கு குறித்த பாடசாலை மாணவர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. சித்தியடைவதற்கு 1 இலிருந்து 10 மதிப்பெண்கள் தேவை படுபவர்கள் புள்ளிகள் வங்கியில், கடன் வாங்கி சித்தியடைய முடியும். ஆனால் அடுத்து வரக்கூடிய பரீட்சைகளில் கடனை வட்டியுடன் சேர்த்து வங்கிக்குத் திருப்பி கொடுக்கும் திட்டத்தை கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.  

குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் ஆய்வுக்கூடம், பேச்சுப் போட்டி போன்றவற்றில் அதிக ஈடுபாடுடையவர்களுக்கு புள்ளிகள் வழங்கி கடனை அடைக்க உதவுகிறார்கள். 

குறித்த திட்டத்திற்கு அரச அங்கீகாரம் வழங்கப்படாத நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் குறித்த பாடசாலையானது ஆய்வு செய்யும் வகையில் திட்டத்தை நடைமுறை படுத்தியுள்ளது. 

இருப்பினும் 10 ஆம் வகுப்பில் படிக்கும்  49 மாணவர்களில் 13 மாணவர்கள் வங்கியிலிருந்து புள்ளிகளை கடனாகப் பெற்றிருக்கிறார்கள். குறித்த திட்டத்தின் ஊடாக நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளதாக குறித்த பாடசாலையின் நிறுவுனர் கான் ஹுவாங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right