பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த சோதனை: வாங்கிய நிறுவனத்திற்காக அரை பில்லியன் அபராதம் 

Published By: Selva Loges

02 Feb, 2017 | 02:43 PM
image

பேஸ்புக் நிறுவனத்தின் பயன்பாட்டிலுள்ள தொழிநுட்ப சாதன பிரயோகமானது, சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டு, வெளி நிறுவனம் ஒன்றின் தொழிநுட்பத்தை உபயோகித்த குற்றத்திற்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை, குறித்த நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வழங்கும்படி அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பொன்றை அளித்துள்ளது.  

 

2014 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாங்கிய ஒகுலஸ் என்ற நிறுவனம், செனிமேக்ஸ் என்ற வீடியோ கேம் தயாரிக்கும் நிறுவனம் தங்களுடைய துல்லிய ஒலியை வெளியிடக்கூடிய சாதனத்தை வெளியிடுவதற்கு வைத்திருந்த மென்பொருள் குறியீடுகளை பயன்படுத்தியுள்ளதை அமெரிக்க நீதிபதிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும்  செனிமேக்ஸ் நிறுவனம் வழங்கிய முறையீட்டை தொடர்ந்து, நடந்த விசாரனையில் ஒகுலஸ் நிறுவனம் குற்றம் புரிந்தது நிருபிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நிறுவனத்தின் பயன் பாட்டாளரான பேஸ்புக் நிறுவனம் சுமார் 500 மில்லியன் டொலர்களை, செனிமேக்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஒகுலஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த தொழிநுட்ப மோசடி வழக்கானது கடந்த வருடம் பேஸ்புக் நிறுவனத்தின் வருமான மதிப்பிடல்களில் இருந்த முக்கியதுவத்தை இழக்க செய்தமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right