‘கெப்டன் கூல்’ தோனிக்கு இந்திய அணி வழங்கிய விசேட பரிசு! (காணொளி இணைப்பு)

Published By: Devika

02 Feb, 2017 | 02:37 PM
image

திறமையான வழிநடத்தல் மற்றும் வசீகரமான தலைமைத்துவம் போன்றவற்றால் இந்திய கிரிக்கெட் அணிக்குப் பெரும் புகழ் தேடித் தந்திருக்கும் மகேந்திர சிங் தோனியை இந்திய கிரிக்கெட் அணி நினைவுப் பரிசளித்து கௌரவித்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற இ-20 போட்டிக்கு முன்னதாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்திய அணி வீரர்கள் மற்றும் ஒரு சில அதிகாரிகளே கலந்துகொண்ட இந்த பிரத்தியேக நிகழ்வில், இந்திய அணி சார்பில் தோனிக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மரத்தாலான ஒரு சட்டகத்தில், தோனியின் மார்பளவுப் படமும், அவரது தலைமைத்துவத்தின் கீழ் பெற்ற முக்கியமான நான்கு வெற்றிகளைக் குறிக்கும் வகையில் நான்கு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

2007 - முதல் இ-20 சர்வதேசத் தொடர், 2011 மற்றும் 2013 - உலகக் கிண்ணப் போட்டித் தொடர், 2009ஆம் ஆண்டு டெஸ்ட் அணிகளின் தரவரிசைப்படுத்தலில் முதல் இடம் என்பவற்றைக் குறிக்கும் வகையிலேயே இந்த நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

அதன் கீழே, ‘முன்னுதாரணமான, தலை சிறந்த தலைவருக்கு நன்றி - இந்திய கிரிக்கெட் அணி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09