அரச அதிகாரிகள் 48,000 டொலர்களுக்குள் ஊழல் செய்யலாம். என்ற ருமேனிய அரசின் அதிரடி அறிவிப்பை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச அதிகாரிகள் சுமார் 48,000 டொலர்களுக்கு குறைவாக ஊழல் குற்றம் புரியும் பட்சத்தில், அவர்கள் தண்டிக்கப்படவோ அல்லது சிறைக்கு அனுப்ப படவோ மாட்டார்கள் என ருமேனிய அரசாங்கம் அறிவித்திருந்தது. 

ருமேனியாவில் 1989 ஆம் ஆண்டு கம்யூனிஸ ஆட்சி கவிழ்ப்பை தொடர்ந்து, தற்போது முதலாவது பெரும் மக்கள் ஆர்ப்பாட்டமொன்று அந்நாட்டு அரசிற்கு எதிராக இடம்பெற்றுள்ளது. 

அரசத்துறையில் ஊழலை ஊக்குவிக்கும் குறித்த அறிவிப்பால் ருமேனிய தலைநகரான பூகாரெஸ்ட்டில் சுமார் இரண்டரை  இலட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

உலகில் முதலாவது நாடக அரச துறைசார் அதிகாரிகள் லஞ்சம் மற்றும் ஊழல் புரிவதற்கான வாய்ப்பை ருமேனிய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ருமேனியாவின் சர்வதேச அளவிலான நற்பெயர், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிணைப்பு மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளுடன் உள்ள உறவுகளில் முறுகல்கள் ஏற்பட்டிருப்பதாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும் போராட்டத்தில் ஈடுபடும் அந்நாட்டு மக்களை, அரசானது காவல் மற்றும் இராணுவ படைகளை கொண்டு அடக்க முனைவதாக அந்நாட்டு ஊடகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.