இந்திய மீனவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்திய தமிழகம் ஜகதாபட்டினம்  பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் 2 படகுகளில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது, காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 5 மீனவர்களையும்  ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறைப் உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.