வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கைப் போககுவரத்துச் சபையினர் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்கு இலங்கை போக்குவரத்து சபையினரை இடம்மாற்றுவதனை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியு இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வடமாகாணத்தில் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் எவையும் சேவையில் ஈடுபடாததால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இருந்த போதிலும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.