அமெரிக்காவில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் : ஒரேநாளில் இந்தியாவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

Published By: MD.Lucias

01 Feb, 2017 | 04:01 PM
image

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய விசா நடைமுறை சட்டமூலத்தால் இந்திய தகவல் தொழினுட்ப நிறுவனங்களின் பங்குகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சட்டமூலம் சட்டமாவதற்கு முன்னரே இந்தியாவில் ஒரேநாளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'உயர் திறமை ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மை சட்டம் 2017' என்ற பெயரிலான விசா சட்டமூலத்தை கலிபோர்னியாவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரான ஜூ லொப்க்ரென் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்தார். 

இந்த சட்டமூலத்தின் பிரகாரம், இனிமேல் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு தொழில் நிமிர்த்தமாக வரும் பணியாளர்கள் ஹெச்-1பி விசா பெற வேண்டுமானால், அந்த ஊழியருக்கு அமெரிக்க டொலர் மதிப்பில் 130,000 டொலர்களுக்கு மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

தற்போதுதுள்ள நடைமுறைப்படி இந்த சம்பளம் 60,000 அமெரிக்க டொலராக உள்ளது. புதிய ஹெச்-1பி விசா சட்டமூலத்தால் அதை பெற வேண்டுமானால், அந்த ஊழியர்கள் தற்போதுள்ள ஊதியத்தைவிட இரட்டை மடங்குக்கு மேல் ஊதியம் பெற வேண்டும். 

இதனால் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்லும் செலவு அதிகரிக்கும் என்பதால் தொழினுபட்ப நிறுவனங்கள் அமெரிக்காவிலுள்ள உள்ளூர் பணியாளர்களையே அந்த பணிக்கு நியமித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

பங்கு சந்தையில் சரிவு 

ஹெச்-1பி விசா சட்டமூலம் அமெரிக்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தால், இந்திய பங்கு சந்தையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன.

 இன்போசிஸ் நிறுவன பங்குகள் 4.5 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. இது அந்த நிறுவனத்திற்கு கடந்த 6 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும்.

டி.சி.எஸ் கடும் வீழ்ச்சி 

டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகள் 5.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 27 மாதங்களில் அந்த நிறுவன பங்குகள் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும். 

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் 9.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. 20 மாத காலத்தில் அடைந்த மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும்.

 விப்ரோவும் தப்பவில்லை 

ஹெச்சிஎல் டெக்னொலஜிஸ் நிறுவன பங்குகள் 6.3 சதவீதம் வீழ்ச்சியடைந்து, 15 மாத காலத்தின் பெரிய சரிவை சந்தித்துள்ளது. 

விப்ரோ நிறுவனம் 4.1 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி இதுவாகும்

இதேவேளை எம்பசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் ஜியோமெட்ரிக் நிறுவனத்தின் பங்குகள் தலா 3.9 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. 

ஹேக்வேர் டெக்னாலஜிஸ் பங்குகள் 3.4 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. 

மைன்ட்ட்ரீ நிறுவன பங்குகள் 3.3 சதவீத வீழ்ச்சியயையும், கேபிஐடி டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகள் 3.1 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன. 

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு மும்பை பங்கு சந்தையின் சுட்டென் குறியீட்டு எண் 4.8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52