இ.போ.ச. மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே மோதல் : இருவர் கைது

Published By: Priyatharshan

01 Feb, 2017 | 02:00 PM
image

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே ஏற்பட்தையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்கு வந்த இ.போ.ச. சாலை சாரதி மீது முல்லைத்தீவிலிருந்து வந்த தனியார் பேரூந்து சாரதியிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியதில் இருவருக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டதில் இ.போ.ச சாரதி படுகாயடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புதிய பேருந்து நிலைய கைகலப்பினையடுத்து இ.போ.ச சாரதிகள் தமது தூரசேவை பேருந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு எடுத்து வந்து சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு சென்ற வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி புதிய பேருந்து தரிப்பிடத்திலிருந்து மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு எடுத்து வந்து தூர சேவை பேருந்துகள் அனைத்தையும் புதிய பேருந்து நிலையத்திற்கு எடுத்துச் சென்று மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் சேவைகளை மேற்கொள்ளுமாறும் சேவை மேற்கொள்ளாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக கடந்த மாதம் அரச அதிபர், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.  

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வடமாகாண போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர், தனியார் பேருந்து, அரச பேருந்து சாரதிகள் ஆகியோர் இடையே கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு தற்போது சுமுகமான போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10