கழிவறையை பயன்படுத்தினால் மாதம் 2500 ரூபா : இந்தியாவில் புதிய திட்டம்

Published By: Selva Loges

01 Feb, 2017 | 11:43 AM
image

இந்தியாவை தூய்மைப் படுத்தும் ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம், ராஜஸ்தான் மாநிலத்தில் கழிவறையைப் பயன்படுத்தினால்  2,500 ரூபா மாத  ஊக்கத் தொகையாக தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அனைத்து தரப்பினரும் சுத்தத்தை பேணும் விதமாக ‛ஸ்வச் பாரத்’  எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது. குறித்த மத்திய அரசின் திட்டத்தை ஊக்கப்படுத்த, மாநில அரசுகளும் நிதி ஒதுக்கீடு செய்து பல திட்டங்களை அறிமுகப்படுத்திவருகின்றன. 

இந்நிலையில்,  ராஜஸ்தான் மாநிலத்தில் கழிவறையைப் பயன்படுத்தினால்  2,500 ரூபா மாத  ஊக்கத் தொகையாக தரப்படும் என அம்மாநில முழுவதுமுள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வீ ட்டில் கழிவறை இல்லாதவர்கள் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ள ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஊக்கத் தொகை பெறுபவர்கள் முறையாக கழிவறையை பயன்டுத்துகிறார்களா? என்பதைக் கண்டறியவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு திட்டத்தின் முதல் கட்டமாக, இரு கிராம பகுதிகளை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் குடும்பத்தினர் குறித்த திட்டத்தால்  பயன் பெறுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி மாநில ஆளுனர், மக்கள் தங்கள் வீட்டில் கழிவறை கட்டினால், கபாலி படத்திற்கான டிக்கெட் வழங்கப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right