சீனாவைச் சேர்ந்த நபரொருவர் தனது வீட்டில் போயிங் 737 விமானத்தையொத்த மாதிரியை வடிவமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வாங் லின் (61 வயது) என்ற மேற்படி நபர் ஏனைய விவசாய தொழிலாளர்களின் உதவியுடன் இணைந்து ஹெனான் மாகாணத்தில் தனக்கு சொந்தமான நிலப் பகுதியில் இந்த மாதிரி விமானத்தை உருவாக்கியுள்ளார்.

அவர் இந்த விமானத்தை எதிர்காலத்தில் உணவகமொன்றாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.

அவர் இந்த விமானத்தை உருவாக்குவதற்காக கடந்த 2014 ஆண்டு இறுதியிலிருந்து இயந்திரப் பொறியியல் மற்றும் உலோக வேலைகள் தொடர்பில் கற்க ஆரம்பித்திருந்தார்.

சுமார் 115 அடி நீளமும் 125 அடி அகலுமுமடைய இந்த விமான மாதிரியை அவர் 22,000 அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கியுள்ளார்.