(எம்.எப்.எம்.பஸீர்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ பொம்மையொன்றை எரித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வைத்திய பீட மாணவர் ஒன்றியம், மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடர்ந்தும் போராடவுள்ளதாக  அறிவித்துள்ளது.

இன்றைய தினம் சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ பட்டத்துக்கு சட்ட ரீதியிலான பெறுமதியை அளித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து புரக்கோட்டை, போதி மரச் சந்தி வரையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து எதிர்ப்பு ஊர்வலமாக சென்ற போதே அந்த மாணவர் ஒன்றியம் மேற்படி அறிவிப்பை விடுத்தது.

நீதிமன்ற தீரு்ப்பினால் அதிருப்தியடைந்த மாணவர்கள் அங்கிருந்து புறக்கோட்டை நோக்கி பதாதைகளைத் தாங்கி டெக்னிகல் சந்தியூடாக திரும்பி புறக்கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர்.

இந் நிலையில் போதி மர சந்தி வரை சென்ற ஆர்ப்பாட்டக் காரர்கள் அங்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவப்பொம்மையை எரித்து, ரணில் - மைதிரி சைட்டத்தை விற்றுவிட்டனர் என வீதியில் எழுதிவிட்டு கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.