( எம்.எம்.மின்ஹாஜ்)

பிரதேச செயலாளரிடம் ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கேட்கக் கூடாது. முதலாவதாக பிரதேச செயலாளரே மன்னிப்புக் கோர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

முன்னைய ஆட்சியில் மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கக்கோரியே அதிகாரிகளை தாக்கினர் .ஆனால் ரஞ்சன் ராமநாயக்க மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சட்டவிரோத செயற்பாட்டை தடுக்கவே அதிகாரிகளை திட்டியுள்ளார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திவுலப்பிட்டிய பிரதேச செயலாளரை திட்டியதை நாம் கண்டிக்கின்றோம். எனினும் மணல் அகழ்வு விடயத்தில் பிரதேச செயலாளர் தவறு இழைத்துள்ளார். அதன் காரணமாகவே அவர் திட்டினார்.  எனவே, பிரதேச செயலாளரிடம் ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கேட்கக் கூடாது. முதலாவதாக பிரதேச செயலாளரே மன்னிப்புக் கோர வேண்டும்.

பிட்ட கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.