நிலுவைச் சம்பளத் தொகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணிப்பிகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணியளவில் தொடங்கிய குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 6 மணிவரை இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பற்ற பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நிமல் சந்திரசிறி தெரிவித்தார்.