ஐக்கிய அமெரிக்க மரபுகளை மீறி முன்னால் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜனாதிபதி டெனால்ட் டிரம்பின் செயற்பாடுகளை எதிர்க்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்குள் 7 முஸ்லிம் பெருபான்மை நாடுகளை சேர்ந்தவர்கள் வருவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல பாகங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீர்மானத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளமை, தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் தங்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டுமென்பது மக்களின் விருப்பமாகும்.

அத்தோடு அமெரிக்காவிற்கு உரித்தான விழுமியங்கள் நெருக்கடிக்குள்ளாகும் போது, மக்கள் தமக்குரித்தான அணிதிரளும் உரிமையை பயன்படுத்த முனைவது என்பது அரசியல் ரீதியாக தாம் எதிர்பார்க்கும் ஒரு விடயமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அமெரிக்க அரச மரபை தாண்டி அடுத்து வந்துள்ள ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களை முன்னாள் ஜனாதிபதி வெயிடுவது வழக்கமல்ல. 

மேலும் குறித்த கருத்துக்களில் ஒபாமா, டிரம்பின் பெயரை பயன்படுத்தவில்லை, இருப்பினும் அவருக்கெதிரான செயற்பாட்டை ஊக்குவிப்பதான கருத்தை வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.