விரைவில் சார்க் மாநாடு : பாகிஸ்தான் அறிவிப்பு

Published By: Selva Loges

30 Jan, 2017 | 03:07 PM
image

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடக்கவிருந்த 19ஆவது சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு, இன்னும் ஓரிரு மாதங்களில் இடம்பெறும் என பாகிஸ்தானின் வெளியுறவு ஆலோசகர்  சர்தார் அஜீஸ் தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தான் தலைநகர்  இஸ்லாமாபாத்தில்  வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸை, சார்க் நாடுகளின் பொதுச்செயலாளராகவுள்ள அர்ஜுன் பகதூர் தாபா   சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைப் பிரச்சனை விவகாரத்தில், பாகிஸ்தான் கொண்டுள்ள பங்கின் காரணமாக இரு நாடுகளிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் 19 ஆவது சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடக்கவிருந்தது.

 இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம். என இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மாநாட்டை புறக்கணித்ததால் மாநாடு நடைபெறவில்லை.

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே உள்ள உறவில் பதற்றம் குறைந்து வரும் நிலையில், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸை, சார்க் நாடுகளின் பொதுச்செயலாளராகவுள்ள அர்ஜுன் பகதூர் தாபா, சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பில் பேசியுள்ள சர்தார் அஜீஸ், 19ஆவது சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டை, பாகிஸ்தான் நடத்துவதற்கு தயாராகவே இருக்கிறது. விரைவில் சார்க் மாநாடு நடக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13