நாட்­டி­லுள்ள அர­சாங்க, அரச அங்­கீ­காரம் பெற்ற சகல தனியார் பாட­சா­லைகள் மற்றும் அனு­ம­திக்­கப்­பட்ட பிரி­வே­னாக்கள் யாவும் 2016ஆம் ஆண்­டிற்­கான கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நாளை 4ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

இதற்­க­மைய சிங்­கள, - தமிழ் பாட­சா­லை­க­ளுக்­கான முதலாம் தவணை 2016 ஜன­வரி 04 ஆம் திகதி நாளை திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மாகி 2016 ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நிறைவு பெற­வுள்­ளது.

இரண்டாம் தவணை 2016 ஏப்ரல் 25ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மாகி 2016 ஜூலை 29ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நிறைவு பெற­வுள்­ளது.

மூன்றாம் தவணை 2016 ஆகஸ்ட் 31 ஆம் திகதி புதன்­கி­ழமை ஆரம்­ப­மாகி 2016 டிசம்பர் 2 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நிறைவு பெற­வுள்­ளது.

நாட்­டி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்­கான முதலாம் தவணை 2016 ஜன­வரி 04ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மாகி 2016 ஏப்ரல் 11ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நிறைவு பெற­வுள்­ளது. இதே­வேளை, முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்­கான இரண்டாம் தவணை இரண்டு கட்­டங்­க­ளாக நடாத்­தப்­ப­ட­வுள்­ளது. முதற்­கட்டம் 2016 ஏப்ரல் 18ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மாகி, 2016 ஜூன் 03ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நிறை­வு­பெ­ற­வுள்­ளது. இரண்டாம் கட்டம் 2016 ஜூலை மாதம் 07ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மாகி 2016 ஆகஸ்ட் 12ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நிறைவு பெற­வுள்­ளது. மூன்றாம் தவணை 2016 ஆகஸ்ட் 22ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மாகி 2016 டிசெம்பர் 02ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நிறைவு பெற­வுள்­ளது. இதே­வேளை பாட­சாலை தவணை அட்­ட­வணை தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட 97/5 சுற்று நிரு­பத்தின் படி இலங்­கையின் சகல பாட­சா­லை­களும் வரு­டத்­திற்கு 210 நாட்கள் நடாத்­தப்­பட வேண்­டு­மென தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பினும் 2016ஆம் வரு­டத்தில் இடம்­பெறும்

அர­சாங்க விடு­முறை தினங்­களை கருத்திற் கொண்டு 210 நாட்கள் பாட­சா­லை­களை நடாத்­து­வ­தற்கு முடி­யா­துள்­ளதால் 2016ஆம் ஆண்டு அர­சாங்க அரச அங்­கீ­காரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் யாவும் 197 நாட்கள் நடாத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.பந்துசேன அறிவித்துள்ளார்.