டொயோட்டாவின் 1000cc ‘விகோ’ அறிமுகப்படுத்தப்படுகின்றது.!

Published By: Robert

30 Jan, 2017 | 10:40 AM
image

இலங்கையில் டொயோட்டா வாகனங்களிற்கான ஏக விநியோகஸ்தரான டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடட் நிறுவனமானது, தனது மிக நவீன 1000cc தர வாகனத்தை வெள்ளிக்கிழமை இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. டொயோட்டா ‘விகோ’ வாகனமானது BMICHல் நடைபெற்ற சிலோன் மோட்டார் காட்சிப்படுத்தலின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. 

‘விகோ’ வாகனமானது இலங்கையில் டொயோட்டா லங்கா நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து ஆட்டோமொபைல் துறையில் முன்னணியாளராக நிலையான ஸ்தானத்தை நிலைப்படுத்திக் கொண்டது வரை அறிமுகப்படுத்தப்பட்ட  1000cc வகை வாகனங்களிற்கான முதலாவது நுழைவாகும். உயர்தரத்தினுடனான ஆனபோதிலும் கட்டுப்படியான, சௌகரியமான மற்றும் பாதுகாப்பான சந்தை தேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம்புதிய நுழைவான ‘விகோ’ வாகனமானது நவீன குடும்பம் மற்றும் இளைய நிர்வாக சமுதாயத்தினரை மனதிற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

டொயோட்டா லங்கா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுங்கோ யோ~pக்கோ இந்த அறிமுகப்படுத்தல் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் “இலங்கையில் தங்களது முதலாவது காரைக் கொள்வனவு செய்யும் ஒரு நபரிற்கு விகோ வாகனமானது பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் கட்டுப்படியான விலை நிர்ணயத்தை வழங்குவது மாத்திரமன்றி புகழ்பெற்ற மற்றும் மதிப்புக்குரிய உலகளாவிய தரமொன்றில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பையும் தன்னகத்தே கொண்டு வருகின்றது. சௌகரியமான மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்பவியல் டொயோட்டா வாகனத்தை உடமையாக்கிக் கொள்ளும் மதிப்பை அனுபவிக்கும் அதேவேளையில் டொயோட்டாவின் உலகளாவிய வாடிக்கையாளர் சேவை தரத்தினுடனான அதி உயர் விற்பனையின் பின்னரான சேவைகளை பெற்றுக்கொள்ளவும் டொயோட்டா லங்காவில் உள்ள நாம் அனைத்து சாத்தியமான கொள்வனவாளர்களையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

‘விகோ’ வாகனமானது நேர்த்தியான வெளிப்புற வடிவமைப்புடனும் ஒருங்கிணைந்த உயர் ஏற்ற நிறுத்த விளக்குடனான ஸ்பாய்லர் மற்றும் காரிற்கு கவர்ச்சியை வழங்கும் குரும தொகுப்பையும் தன்னகத்தே கொண்டு வருகின்றது. இவ் வாகனமானது சிறியதான போதிலும் புதிய அல்லது அனுபவமிக்க சாரதிகளிற்கு உல்லாசமான அதே வேளையில் இயக்க இலகுவான வாகனமாக சந்தைப்படுத்தப்படுகின்றது. ‘விகோ’ வாகனமானது பின் இருக்கை பயணிகளிற்கு போதுமான அளவு கால்களை நீட்டும் வசதியை வழங்குவதுடன் விசாலமான பயண பொதிகளை உள்ளடக்கக்கூடிய பின்புற பிரிவையும் கொண்டுள்ளது. 

USM மற்றும் AUX என்பவற்றையும் Radio/CD/MP3 போன்ற வசதிகளையும் உள்ளடக்கி காணப்படும் இவ் வாகனமானது மின்சார சாளரங்கள் மற்றும் கதவு பூட்டுக்கள், நிலையான ஏர் பேக்குகள் மற்றும் எதிர் இழுவை பிரேக்கிங் சிஸ்டம் என்பவற்றையும் கொண்டுள்ளது. இவ்வாகனமானது அதிக எரிபொருள் திறன் உத்தரவாதமளிக்கும் 1L லைன் 3 சிலிண்டர் இன்லைன் DOHC என்ஜினில் இயங்குவதுடன் 4- வேக தானியங்கு டிரான்ஸ்மி~னையும் கொண்டுள்ளது.

இலங்கையில் பிரத்தியேகமாக டொயோட்டா 3 வருட/100,000km உத்தரவாதத்துடன் விற்பனை செய்யப்படும் இவ் வாகனத்தை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் டொயோட்டாவின் உலகளாவிய தர விற்பனையின் பின்னரான சேவைகளை பெறும் வாய்ப்பையும் பெற்றுக் கொள்ள இயலுமாக காணப்படுகின்றது. மேலதிக தகவல்களிற்கு டொயோட்டா லங்கா நிறுவனத்தை 0112 939000 ல் தொடர்பு கொள்ளுக அல்லது 337, நீர்கொழும்பு வீதி, வத்தளையிலுள்ள காட்சியறைக்கு வருகை தாருங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58