பாலத்திற்கு உரிமை கோரல் : மலையகத்தில் பதற்றநிலை

Published By: Robert

30 Jan, 2017 | 09:45 AM
image

ஹட்டன் போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் கடந்த 22.11.2017 அன்று சேதமாகிய பாலம் மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சின் 10 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் பாலம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக நேற்று மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன அவரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், கணபதி கனராஜ், பிலிப்குமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பாலம் 22.11.2017 அன்று போக்குவரத்து செய்ய முடியாத அளவில் உடைந்து சேதமாகியது. இதனையடுத்து இப்பாலத்தை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி அவ்வழியாக செல்லும் பஸ் சாரதிகள் மற்றும் பொது மக்களினால் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இப்பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பாலம் புனரமைக்கப்பட்டது. எனினும் இப்பாலத்தின் திறப்பு விழா இடம்பெறுவதற்கு முன்பு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா உள்ளிட்ட அவ்கட்சியின் பலர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர். இதனால் அவ் பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும் சூழ்ந்துள்ளனர்.

இதனால் இரு கட்சிகளுக்குமிடையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவிடக்கூடாது என்பதிற்காக ஹட்டன் பொலிஸாரினால் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

எது எவ்வாறாகயிருந்தாலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா உள்ளிட்ட கட்சியின் பலர் புனரமைக்கப்பட்ட பாலத்தினை பார்வையிட்டதுடன், இப்பாலத்தின் புனரமைப்பில் தமது பங்களிப்பும் உள்ளதாவும் மக்களுக்கு தெளிவூட்டல் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

அதன்பிறகு வருகை தந்த மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன மற்றும் மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இவ்பாலத்தை திறந்து வைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04