மாங்குளம் பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி, பல கால்நடைகள் காயம்

Published By: Priyatharshan

30 Jan, 2017 | 09:36 AM
image

மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் பல கால்நாடைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று முல்லைத்தீவு  மாங்குளம் பகுதியில், வீதியில் நின்ற எருமை மாட்டுக் கூட்டம் ஒன்றிமீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 15 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலியானதோடு 20 க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்துள்ளன.

வீதியில் நின்ற  மாட்டு கூட்டத்தை அவதானிக்காத சாரதி அதிவேகமாக சென்று, மாட்டுக் சுட்டத்தின் மீது மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பேரூந்தில்  பயணம் செய்த பயணிகள் சிலரும்  சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.



இதில் பலியான மற்றும் காயமடைந்த  மாடுகளின்  பெறுமதி 15 இலட்சத்திற்கும் அதிகமென தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



அண்மைக் காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வீதிகளில் கட்டாக்காலிகளாக அலையும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதோடு அதிகளவான கால்நடைகளும் அழிந்து வருகின்றன.


கால்நடைகளால் பயன்பெறும் உரிமையாளர்கள்  அவற்றை உரியவகையில் வளர்த்து பராமரித்தால் இவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டு, பெருமளவில் வருமானத்தை ஈட்டித்தரும் கால்நடைகள் அநியாயமாக அழிந்து போவதை தடுக்கலாம் என்பதோடு அநேகமான விபத்துக்களையும் மனித உயிரிழப்புக்களை தவிர்க்கமுடியுமென சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46