அம்பாறை - கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி வந்த வேன் அக்கரைப்பற்று டிப்போ பஸ்ஸூடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில்  மேலும் பெண்கள் உட்பட 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் காயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றனர்.