சட்டவிரோதமாக 112 மில்லியன் ரூபா பெறுமதியான நாணயங்கள் கடத்த முற்பட்ட ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். 

 கைது செய்யப்பட்டவர் வசமிருந்து  வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயங்களை கைப்பற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த நாணயங்களை சந்தேகநபர் டுபாய்க்கு கடத்த முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.