நாக்பூரில் நடந்த இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபது-20 கிரிக்கெட் போட்டியில் பும்ராவின் அபார பந்து வீச்சியுடன் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபது20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

மூன்று போட்டிகளை கொண்ட இத் தொடரில் கன்பூரில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான இரண்டாவது போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்தும், முதல் வெற்றியை பதிவு செய்ய இந்தியாவும் களமிறங்கியுள்ளதால் இப்போட்டி பரபரப்பாக அமைந்திருந்தது.

 முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதலில்  20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் லோகேஷ் ராகுல் 71 ஓட்டங்களை பெற்றார். மணிஷ் பாண்டே 30 ஓட்டங்களை எடுத்தார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

 அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி , 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று   5 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய நெஹ்ரா 3, பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.