அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் எதிர்ப்பு.!

29 Jan, 2017 | 10:21 AM
image

மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறுவோரை தடுக்க, அந்த நாட்டின் எல்லையில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு பிரமாண்ட தடுப்புச்சுவர் எழுப்ப அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதற்கான பணத்தை தர முடியாது என மெக்சிகோ கூறி உள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது 20 சதவீத கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவு எடுத்திருப்பது, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி டெக்ரானில் அவர் கூறுகையில், “பல ஆண்டுகளுக்கு முன்பு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதை டிரம்ப் மறந்து போனார் போலும். நாடுகளுக்கு இடையே சுவர்கள் இருந்தால், அவை அகற்றப்பட வேண்டும். நாடுகளுக்கு இடையே தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நேரம் இது அல்ல” என குறிப்பிட்டார்.

ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்திருப்பது பற்றி ஹசன் ரவ்ஹானி நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், “உலக நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கை செய்து கொண்ட காலம் தொடங்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் கதவுகளை திறந்து வைத்துள்ளது” என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10