முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான புதிய சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்தில் ஈடுபடும் மற்றும் ஏனைய முச்சக்கரவண்டிகளில் கட்டாயம் மீற்றர் கருவி பொருத்துதல், முச்சக்கரவண்டி செலுத்தும்போது புகைப்பிடிப்பதை தவிர்த்தல் மற்றும் முச்சக்கரவண்டிகளில் பயணிப்போருக்கு சொந்தமான பொருட்கள் தவரவிடப்படுமாயின் அதனை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தல் போன்ற சட்டமூலங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை முச்சக்கரவண்டி சாரதியின் சாரதி அனுமதிப்பத்திர இலக்கம், நிழற்படம், வாகனம் பதிவுசெய்யப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கம் மற்றும் சாரதியின் பெயர் என்பவற்றை பயணிகளுக்கு தெரியும்படி  காட்சிப்படுத்தலும் முக்கியமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.