500 கிலோமீற்றர்கள் திசைமாறிய சீன இளைஞனின் புதுவருட பயணம்!

Published By: Selva Loges

28 Jan, 2017 | 12:59 PM
image

1700 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள வீட்டிற்கு சைக்கிளில் சென்றவர் 500 கி.மீ வரை தவறான பாதையில் சென்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது,

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் பணிபுரிந்த குடியேற்றவாசியொருவர், தனது வருமானத்தை வீட்டிற்கு அனுப்பியா நிலையில் எஞ்சிய தொகையை வீன் செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சீன புதுவருட நிகழ்விற்காக வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். குறித்த இளைஞரிடம் பணமில்லாத நிலையில் 1700 கி.மீ தொலைவிலுள்ள ஹெய்ஜோக்கிங் மாகாணத்திலுள்ள கியூஹார் நகரிற்கு சைக்கிளில் பயணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ரிஷாஓ நகரிலிருந்து பயணத்தை தொடங்கியுள்ள குறித்த நபர், பல வாரங்கள் பயணம் செய்த நிலையில் சுமார் 500 கி.மீ தூரத்திலுள்ள, மத்திய சீன மாகாணமான அன்ஹுய்யில் உள்ள பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். அதன் போதே குறித்த நபர் வழிகாட்டிகளை படிக்கமுடியாமல், வரும் வழிகளில் இருந்தவர்களிடம் கேட்டு தவறுதலான பாதையில் பயணம் செய்தமை தெரியவந்துள்ளது. 

குறித்த நபரின் நிலையை உணர்ந்த பொலிஸார், அவரது ஊருக்கு செல்வதற்கு தேவையான புகையிரத அனுமதிகளை பெற்று கொடுத்துள்ளனர். மேலும் குறித்த நபர் ஒரு மாதங்கள் கடந்த நிலையில் தனது சொந்த ஊரை சென்றடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right