இந்த நாட்டுக்கே ஒரு விடுதலையைத் தேடித்தந்த ஒரு மாபெரும் தலைவன் தான் எங்களுடைய தலைவர் மதிப்பிற்குரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவென கருணா அம்மான் என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

புதிய மாற்றத்திற்கான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் பொது எதிரணியின் மக்கள் கூட்டம் நேற்று நுகேகொடையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கருணா அம்மான் என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை, நாங்கள்  ஒருபோதும் மறக்க முடியாது. 

உலகத்திலே அழிக்க முடியாத பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து, இன்று இந்த நாட்டுக்கே ஒரு விடுதலையைத் தேடித்தந்த ஒரு மாபெரும் தலைவன் தான் எங்களுடைய தலைவர் மதிப்பிற்குரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என அவர் மேலும் தெரிவித்தார்.