பொலிஸ் உத்தியோத்தரை கொலை செய்யத சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபரொருவர் இன்று காலை சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவின் பொலன்னறுவை பகுதியிலுள்ள இல்லத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இனந்தெரியாத நபரால் கொலைசெய்யப்பட்ட நிலையில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரொருவர் இன்று காலை சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.