அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் அதிரடியான சில முடிவுகள் எடுத்து பரபரப்பு உடன் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்நிலையில் அமெரிக்காவில் டெக்சாஸ் நகரத்தின்  டல்லாஸ் பகுதியில் உள்ள பாடசாலையில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அப்போது அப்பாடசாலையினை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தான் வைத்திருந்த தண்ணீர் துப்பாக்கியைக் கொண்டு தொடர்ந்து குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பான திரையை நோக்கி சுட்டுள்ளார். இதை அவர் தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது. இதை பார்வையிட்ட பாடசாலை நிர்வாகம், சொந்த விருப்பு, வெறுப்புகளை பாடசாலை பணியில் காட்டியமைக்காக குறித்த ஆசிரியை இடை நீக்கம் செய்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய இன்ஸ்டகிராமில் அந்த வீடியோவை நீக்கம் செய்துள்ளார். ஏனினும் குறித்த வீடியொ தற்போதும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.