தெஹிவளை, அத்திட்டிய பகுதியில் அடையாளம் காணமுடியாத நிலையில் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த இரு சடங்களும் இன்று காலை அத்திட்டிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சடங்கள் இரண்டும் கால்வாயின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.