இலங்கையிலுள்ள முன்னணி கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான RN Constructions (Pvt) Ltd, தனது 20 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, தனது ஊழியர்கள், தெரிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் ஆலோசகர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

RN நிறுவனங்கள் குழுமமானது, தனது குழுமத்தின் கீழுள்ள ஆறு துறைசார் நிபுணத்துவ நிறுவனங்களின் மூலமாக தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, உயர் தரத்திலான கட்டுமானத் தீர்வுகளை வழங்கிவருகின்றது.

வெறும் 3 ஊழியர்களுடன் 1996 ஆம் ஆண்டில் தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்திருந்த RN Constructions (Pvt) ltd என்ற தாய் நிறுவனம், தற்போதைய பணிப்பாளர் சபைத் தலைவரும், தகைமை பெற்ற குடிசார் பொறியியலாளருமான ருவான் எதிரிசிங்க மற்றும் அவரது சகோதரரான நிஷாந்த ஆகிய இரு சகோதரர்களின் தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவ சிந்தனையுடன் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.

தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலை கட்டடங்கள், வர்த்தக பயன்பாட்டு கட்டடங்கள், வீடமைப்புச் செயற்திட்டங்கள், ஹோட்டல்கள், வைத்தியசாலைகள், வீதிகள், பாலங்கள் மற்றும் தொலைதொடர்பாடல் கோபுரங்கள் போன்றவற்றின் கட்டுமானத்தில் RN குழுமம் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது.

தனது உள்ளக வடிவமைப்பு அணி, இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருள் உற்பத்தி வசதிகளுடன் அனைத்துச் செயற்திட்டங்களுக்கும் தனது சொந்த நிபுணத்துவத்தை நிறுவனம் உபயோகிப்பதுடன் கட்டுமானத்துறையில் அதியுச்ச தரமான பெருமதிப்புமிக்க M1 தரத்தை 2005 ஆம் ஆண்டில் எட்டியிருந்தது.

இந்த அதியுயர் மட்ட சாதனை இன்று வரை தொடர்வதுடன் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து (ICTAD) C1 தரத்தைப் பெற்றுள்ளதுடன், ISO:9001:2008, ISO 14001:2004, OHSAS 18001:2007 ஆகிய தர சான்று அங்கீகாரங்களையும், Det Norske Veritas தர மற்றும் முகாமைத்துவ முறைமை சான்று அங்கீகாரத்தையும் சம்பாதித்துள்ளது. 

பக்கவாட்டு ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தியுள்ள நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் கைத்தொழில் நிர்மாணச் செயற்திட்டங்களில் கணிசமான சந்தைப்பங்கினை தன்வசப்படுத்தியுள்ளது. தனது தொழிற்பாடுகளை விஸ்தரிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக 2006 ஆம் ஆண்டில் RN Readymix (Pvt) Limited நிறுவனத்தை ஸ்தாபித்ததுடன் சர்வதேச தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளின் கீழ், 4 உயர் தரத்திலான 4 திரள்படுத்தல் ஆலைகள் மூலமாகரூபவ் உயர் தரத்திலான திரள் கொங்கிரீட் (readymixed) உற்பத்தி செய்து வருகின்றது.

2007 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது நிறுவனமாக Amalgamated Building System Lanka (Pvt) Limited (ABSL) நிறுவனத்தை ஆரம்பித்ததுடன் அதன் மூலமாக கைத்தொழில் மற்றும் வர்த்தக பாவனைக்கான கட்டடங்களை நிர்மாணிக்கும் தொழிற்துறைக்குள் காலடியெடுத்து வைத்திருந்தது.

இன்று கொழும்பிலுள்ள மிகவும் உயரமான, முற்கூட்டியே உருவாக்கப்பட்ட உருக்கு கட்டட கட்டமைப்புக்களுக்குப் பின்னால் தனது வர்த்தகநாமத்தைப் பொறித்துள்ளதுடன் இலங்கையில் அனேகமான கைத்தொழில் மற்றும் வர்த்தக பாவனை கட்டடங்களையும் நிர்மாணித்துள்ளது.

RN குழுமத்தின் மூன்றாவது நிறுவனமாக, RN Cement Product (Pvt) Limited நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் பொருத்தப்பட்ட, திடமான மற்றும் துளைகொண்ட சீமெந்து பாளங்கள் மற்றும் பொருத்தப்படக்கூடிய நடைபாதைக் கற்கள் போன்ற சீமெந்து உற்பத்திகளை தயாரித்து வருகின்றது.

2008 ஆம் ஆண்டில் தனது நான்காவது நிறுவனமாக, ABSL Roofing Products (Pvt) Limited இனை ஆரம்பித்ததுடன் செயற்திட்டங்களை பூர்த்தி செய்வதற்குத் தேவையான இரும்புக் கூரைகள் மற்றும் சுவர் உற்பத்தி வகைகள் மற்றும் வர்த்தகநாமங்களின் கீழான ஒட்டுமொத்த இரும்பிலான கட்டட கட்டமைப்புக்களை உற்பத்தி செய்து, இரும்புக் கட்டட வர்த்தகத்திற்கு உதவியாக தொழிற்பட ஆரம்பித்தது.

புத்தம்புதிய நிறுவனமாக அறிமுகமாகிய RN Innovative Products (Pvt) Limited, ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில என்ற இடத்தில் ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தி நிறுவனமாக தொழிற்பட ஆரம்பித்துள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு நவீன கட்டட நிர்மாணத் தொழிற்துறையின் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் பல்வேறுபட்ட கட்டுமான மூலப்பொருட்களை முழுமையாக உற்பத்தி செய்கின்ற ஐந்து உற்பத்தி ஏற்பாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய RN குழுமத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான ருவான் எதிரிசிங்க,

“எமது நிறுவனத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இலக்கினை நாம் எட்டியுள்ள நிலையில், ஒப்பீட்டளவில் குறுகிய காலமான 20 ஆண்டுகளில், இலங்கையில் கட்டுமானத் தொழிற்துறையில் நாம் சிகரங்களை எட்டியுள்ளோம் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.

நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது, எமது தொழிற்பாடுகளின் முதல் 10 வருடங்களில் அடிப்படை விடயங்களுக்கு நம் சரியான முறையில் அத்திவாரமிட்டு, தொடர்ந்தும் முன்னேறும் வகையில் கட்டுமானத் தொழிற்துறையில் உச்ச தரப் பிரிவை எட்டியிருந்தோம்.

அடுத்த 10 ஆண்டுகளில், மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்ட விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களில் எமக்குத் தேவையான பிரதான மூலப்பொருட்கள் அனைத்தையும் உற்பத்தி செய்யும் வகையில் பக்கவாட்டு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

இவை அனைத்தும் போட்டித்திறன் கொண்ட விலையில் அதியுயர் தரத்திலான உற்பத்திகளை எமது வாடிக்கையாளர்களுக்கும், சந்தைக்கும் வழங்க எமக்கு இடமளித்துள்ளது. இன்று இலங்கையில் அனைவரும் நாடி வருகின்ற ஒரு நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன் குறித்த காலத்தில் செயற்திட்டங்களைப் பூர்த்தி செய்தல் போட்டித்திறன் கொண்ட விலைகள்ரூபவ் அதிசிறந்த தொழில்நுட்பத்தின் பாவனை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அர்ப்பணிப்புமிக்கரூபவ் தொழில் நேர்த்தியுடனான சேவை ஆகியவற்றுடனான எமது கடந்த கால சேவை வரலாறே இவை எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணமாகும்” என்று குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில்ரூபவ் RN Constructions (Pvt) Limited நிறுவனம், தனது தொழில்சார் கட்டுமானம், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி தொடர்பான வெற்றிகரமான தொழிற்பாடுகளுக்காக 25 இற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும், இனங்காணல் அங்கீகாரங்களையும் சம்பாதித்துள்ளது.

ORIT Apparels நிறுவனத்திற்காக 3 மாடி தொழிற்சாலைக் கட்டடமொன்றை நிர்மாணித்தமைக்காக 2006 ஆம் ஆண்டில் ICTAD கட்டுமானத் துறை சிறப்பு விருது, Serendib களஞ்சியசாலை கட்டடச் செயற்திட்டத்திற்காக 2008 ஆம் ஆண்டில் ICTAD கட்டுமான பாதுகாப்பு விருது, 2008 ஆம் ஆண்டில் இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்கள் ஒன்றியத்தால் (FCCISL) ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கையின் மிகச் சிறந்த தொழில்முயற்சியாளர்” நிகழ்வில் பிளாட்டினம் விருது, 2008 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனத்தால் (CNCI) ஏற்பாடு செய்யப்பட்ட “கைத்தொழிற்துறையில் மேன்மைக்காக இலங்கையின் மிகச் சிறந்த கைத்தொழில் துறை சாதனையாளர்” நிகழ்வில் தங்க விருது, பண்ணல என்ற இடத்தில் நெஸ்லே நிறுவனத்தின் களஞ்சியசாலை கட்டடத்திற்காக 2015 ஆம் ஆண்டில் “கட்டுமானச் சிறப்பு” விருது மற்றும் “பசுமைச் சிறப்பு” மற்றும் சீதுவையில் Distilleries Company of Sri Lanka (DCSL) நிறுவனத்திற்காக உற்பத்திகளை போத்தலில் அடைக்கும் ஆலைக்காக 2016 ஆம் ஆண்டில் CEDA “கட்டுமான சிறப்பு” விருது ஆகியன அவற்றுள் குறிப்பிடத்தக்க சில விருதுகளாகும்.

நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் தமது புதிய செயற்திட்டங்களை மீண்டும் RN குழுமத்திடமே ஒப்படைத்துள்ளதுடன், அதன் மூலமாக பல்வேறு முக்கிய தொழிற்துறைகளில் நிலையான திட்டங்கள் பல நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர் நிறுவனங்கள் சில வருமாறு: சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட், Timex and Fergasem குழுமம், நெஸ்லே லங்கா, மலிபன் பிஸ்கட்ஸ், பிரமிட் லங்கா, Shangri-La ஹோட்டல்கள் குழுமம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி, Distilleries Company PLC of Sri Lanka, பிரண்டிக்ஸ் லங்கா, யுனிலீவர் ஸ்ரீலங்கா, MAS Holdings, Nature’s Beauty Creations, Lion Brewery, டி. சாம்சன் இன்டஸ்ரீஸ், குளோபல் றபர் இன்டஸ்ரீஸ், டயலொக் அக்ஸியாடா, சம்பத் வங்கி, Centara Ceysands Resort & Spa, ஆனந்தா கல்லூரி, டிஎஸ் சேனாநாயக்க கல்லூரி, Stone N String, Vision Care Optical Services, Empire Teas, Airport Aviation, வீதி அபிவிருத்தி அதிகார சபை.