மஹிந்தவின் பேரணிக்கு பலா, குரோட்டன் இலைகளுடன் வந்த மக்கள் கூட்டம்..!

Published By: Selva Loges

27 Jan, 2017 | 11:14 PM
image

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்  நுகேகொடையில் இன்று மாலை நடைபெற்ற பேரணியில்  பெருந்திரளான மக்கள் கையில் பலா மற்றும் குரோட்டோன் இலைகளை ஏந்திவந்தனர்.

நல்லாட்சி அரசாங்கம் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தி வாழ்க்கை செலவை உயர்த்தியுள்ளதால் தற்போது விலங்குள் உண்ணும் இலைகளை சாப்பிடும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை சித்தரிக்கும் முகமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்த பலா மற்றும் குரோட்டன் இலைகளை ஏந்திவந்தனர்.

 நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மேசடி என்பவற்றை பிரதானப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

இதில் கூட்டு எதிரணியின் உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, ஜி.எல். பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் சிறை வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி மற்றும் அவருடைய மகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24