அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில், புலி ஒன்றுக்குப் போக்குக் காட்டிய வாத்தின் காணொளி இணையதளத்தில் பரபரப்பாகப் பரவி வருகிறது.

வாத்தைப் பிடிப்பதற்காக குளத்தினுள் இறங்கிய புலிக்கு பாச்சா காட்டிய வாத்து, தண்ணீருக்கு வெளியேயும் உள்ளேயுமாக மாறி மாறி நீந்தி புலியைக் களைக்கவே வைத்துவிட்டது.

ஒரு கட்டத்தில், தன்னைத் தின்னும் வெறியுடன் அலையும் அந்தப் புலிக்குப் பின்னால் கூட வாத்து நீந்தியபடி வந்தது. புலி தன்னைக் கவனிக்கவில்லை என்றதும் ‘வா வா’ என்பது போலத் தனது இறகுகளைப் படபடவென அடித்தது.

சுமார் பத்து நிமிட முயற்சி வெற்றியளிக்காத நிலையில் குளத்தில் இருந்து வெளியேறியது புலி.