கண் வறட்சியை தடுக்கும் விற்றமின்கள்

Published By: Robert

27 Jan, 2017 | 04:12 PM
image

இன்றைய திகதியில் ஆண் பெண் என இருபாலரும் வயது வித்தியாசமின்றி கணினி மற்றும் கையடக்க செல்பேசி ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருப்பதில்லை. உறக்கம் 8 மணி நேரம் என்றால் மீதமுள்ள நேரத்தில் பெரும்பாலானவர்கள் கொம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்படுத்துவதில் தான் நேரத்தினை செலவிடுகிறார்கள். இதனால் கண் இமைகள் இமைக்கப்படும் எண்ணிக்கை இயல்பை விட குறைந்துவிடுகிறது. பின்னர் கண்கள் வறண்டு (Dry Eyes)விடுகின்றன. 

இதற்கான தீர்வு குறித்து மருத்துவர்களிடம் கேட்டால், அவர்கள் கண்களுக்கு போதிய அளவிற்கு ஒய்வுக் கொடுக்கவேண்டும், ஒரு நிமிடத்தில் கண் இமைக்கும் எண்ணிக்கையை இயல்பான அளவைவிட குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதிக நேரம் கணினியையோ அல்லது செல்போனையும் பார்க்கக்கூடாது. அல்லது கண்ணாடி அணிந்து பாதுகாப்புடனும்,உரிய கால அவகாசத்தில் பயிற்சி எடுத்தும் கண்களை வறண்டு விடாமல் கண்காணிக்கவேண்டும். அத்துடன் கண்கள் வறட்சியடையாமல் இருக்க விற்றமின் ஏ மற்றும் விற்றமின் டி ஆகியவற்றை தினமும் உரிய அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவ்விரண்டு விற்றமின்களும் கண்களை வறட்சியடையாமல் காக்கின்றன. அத்துடன் ஓமேகா 3என்ற ஊட்டசத்தினையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஓமேகா  3யை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. தற்போது வறண்டுபோன கண்களுக்கான சிகிச்சையில் ப்ளூலைட் தெரபி என்ற சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது. ஒரு சிலருக்கு இதனாலும் பயன் கிடைக்கின்றன.

டொக்டர் M. ராஜன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29