நாளை மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.!

Published By: Robert

27 Jan, 2017 | 10:17 AM
image

காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக நாளை காலை 10 மணிக்கு மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அளித்த உறுதிமொழியை ஏற்று, சுயேட்சையாக ஒன்று கூடிய இளைஞர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி 4 நாட்களாக நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று மாலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நீராகாரம் வழங்கி முடித்து வைத்தார்.

காணாமல் போன குடும்பங்களின் சங்கம் மாசி மாதம் 9 ஆம் திகதி சட்டம், ஒழுங்கு அமைச்சர், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மா அதிபர், நீதி அமைச்சர் இவர்களுடன் 16 பேர் கொண்ட குழுவும் அருட்தந்தையர்களும் சந்திப்பார்கள். இக்கூட்டம் அன்று காலை 11 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறும் என்று எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் பாதுகாப்பு ராஜாங்க ஆமைச்சர் ருவான் விஜேவர்தன கையெழுத்திட்டுள்ளார். 

இந்தக் காலப்பகுதியில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மாசி மாதம் 9 ஆம் திகதி நடைபெறுகின்ற சந்திப்பின்போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27