ஒரே ஓவரில் ஆறு விக்கட்! அவுஸ்திரேலிய வீரர் அதிரடி!

Published By: Devika

26 Jan, 2017 | 04:52 PM
image

‘ஹெட் ட்ரிக்’ ஒன்றைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் இருக்கக்கூடிய கனவுதான்! ஆனால், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒரே ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் க்ளப் கிரிக்கெட் வீரர் அலட் கேரே! பந்து வீச்சாளரான இவர் பல்லரே கிரிக்கட் சபையுடனான போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விக்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலட் வீசிய முதல் எட்டு ஓவர்களிலும் ஒரு விக்கட்டையும் அவரால் வீழ்த்த முடியவில்லை.

ஆனால் ஒன்பதாவது ஓவரில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கட்களை வீழ்த்தி அசத்தினார்.

ஒன்பதாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் முறையே ஸ்லிப்பில் நின்றவரிடமும் விக்கட் காப்பாளரிடமும் பிடி கொடுத்து எதிரணியினர் சரணடைய, மூன்றாவது பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஒருவர் ஆட்டமிழந்தார். அடுத்த மூன்று பந்துகளும் நேரே விக்கட்டுகளைத் தாக்க, மொத்தமாக இரண்டு ஹாட் ட்ரிக்குகளுடன் வரலாற்றுச் சாதனை படைத்தார் கேரே!

போட்டியில் 40 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது பல்லரே.

போட்டியின் பின் பேசிய அலட், “என்னாலேயே இதை நம்ப முடியவில்லை. ஆனால் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49