25 வருட சேவைக்காலத்தை கௌரவப்படுத்திய BMICH

Published By: Priyatharshan

26 Jan, 2017 | 04:51 PM
image

BMICH அதன் கடந்தாண்டு வெற்றியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் 2017 இன் முதலாவது வேலை நாளினை பன்முக கலாசாரங்கள் மற்றும் பன்முக சமயங்களுடன் ஆரம்பித்திருந்தது.

இந்த நிகழ்வில் முன்னணி பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மத குருமார்களின் ஆசிர்வாதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஊழியர்களும் தங்கள் பராம்பரிய விசுவாக உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருந்தனர். BMICH இல் 25 வருடத்திற்கும் மேலாக சேவையாற்றிவரும் 19 ஊழியர்களுக்கு இந்நிகழ்வு மறக்கமுடியாத நாளாக அமைந்திருந்தது.

நீண்டகால சேவையை பாராட்டும் விதத்தில் ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம் வழங்கப்பட்டன. 2016 இல் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவப்படுத்தும் வகையில் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் வருடத்திற்கான சிறந்த ஊழியருக்கான அங்கீகாரம் குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்திருந்தது. இந்தத் தெரிவின் போது ஒவ்வொரு காலாண்டுக்குமான சிறந்த செயற்பாட்டாளர் என்ற வகையில் மதிப்பிடப்பட்டிருந்தது.

“BMICH இல் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வாடிக்கையாளர் மையப்படுத்திய சேவை வழங்கலை ஊக்குவிக்கும் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு பங்களிப்பு வழங்குகிறது. கடந்தாண்டு ஜெனீவா நகரில் இடம்பெற்ற கோல்ட் சென்சரி சர்வதேச தர ERA விருதுகள் விழாவின் வெற்றியாளராகவும் தெற்காசியா பயண விருதுகள் 2016 இன் முன்னணி சந்திப்பு மற்றும் மாநாட்டு மண்டபமாக அடையாளப்படுத்தியதையிட்டு தாம் மிகவும் பெருமையடைவதாக நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இவ்விரு விருதுகளுமே எமது ஊழியர்களின் திறனையும், BMICH இனால் வழங்கப்படும் வசதிகளையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது” என மேலும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58