உலகின் முன்னணி நிறுவனங்கள் பங்கு பற்றும் டிஜிட்டல் மாநாட்டை இவ் வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த மாநாடானது எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக , தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

 மாநாட்டில் கூகுள், பேஸ்புக் , சோசல்  கெப்பிட்டல் மற்றும் இன்பொயிஸ் முதலான உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் பங்கு பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சமர்ப்பித்த அமைச்சரவை மனுவானது அங்கீகரிக்கப்பட்டுள்ளன்பது குறிப்பிடத்தக்கது.