சிறார்களின் உடல் எடை மீது கவனம்

Published By: Robert

26 Jan, 2017 | 02:04 PM
image

இலங்கை,இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் 2025 ஆம் ஆண்டில் 12 வயதிற்குப்பட்ட சிறார்களில் சுமார் 40 சதவீதத்தினருக்கு மேல் உடற்பருமன் எனப்படும் கூடிய உடல் எடையுடன் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இதன் காரணமாக உடற்பருமன் என்பது நோயாக உருமாறி, இளைய தலைமுறையினர் மனித வளத்தை குறைத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உடற்பருமன் ஏற்படுவதற்கு நாம் மாற்றியமைத்துக்கொண்ட உணவு பழக்கவழக்கங்களும், உணவு வகைகளும் தான் பிரதான காரணமாக இருந்தாலும் பெற்றோர்களும், சிறார்களும் இணைந்து இதுகுறித்த விழிப்புணர்வை தற்போதிலிருந்து பெறவேண்டும். பாலபருவ உடற்பருமனை கவனியாது அலட்சியப்படுத்தினால், அவர்கள் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, இதய பாதிப்பு  குறிப்பாக இதயத்திற்கான இரத்த குழாய் பாதிப்பு, இன்சுலீன் சுரப்பியின் செயல்பாட்டை சீர்குலையச் செய்து டைப்  2 நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடிய அபாயம், சுவாசக் கோளாறு, உறக்கமின்மை, ஆஸ்துமா, மூட்டு வலி குறிப்பாக தசைக்கூடுமிடங்களில் எதிர்பாராத சீர்குலைவுகள், கல்லீரலில் கொழுப்பு படிதல், நெஞ்செரிச்சல்,தன்னம்பிக்கையில் பாதிப்பு, நீண்ட கால மனக்கவலை போன்ற பாதிப்புகளுக்கு அவர் ஆளாகிவிடுவார்கள். இதனால் பெற்றோர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் சத்தான உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதுடன் அதனை பழக்கத்திற்குக் கொண்டு வந்து ஆரோக்கியமான உடல் எடையை பேணவேண்டும்.

உடனே பெற்றோர்கள் மருத்துவர்களிடம் எம்மாதிரியான விடயங்களை நடைமுறைப்படுத்தலாம் என்று கேட்பார்கள். அதற்கான பதில்கள் இதோ..

கார்போஹைட்ரேட் சத்து அதிகமுள்ள உணவை வாரமொரு முறை முற்றாக தவிர்க்கவேண்டும்.இனிப்பையும் கசப்பையும் கலந்த திண்பண்டங்களை தயாரித்து தரலாம்.தினமும் 30 நிமிடம் மெல்லோட்டம், நடைபயிற்சி, ஜாகிங் செய்யவேண்டும். வனஸ்பதி போன்ற செயற்கையான கொழுப்பை முற்றாக தவிர்க்கவேண்டும்.ஒரு நாளைக்கு 30 மி.லீ அளவிற்குள்ளேயேத்தான் குளிர்பானத்தை அருந்தவேண்டும். மைதா,வெள்ளைச்சர்க்கரை (ஜீனி) இவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.

மேலேக்குறிப்பிட்ட விடயங்களை மனதில் இருத்தி, உணவு வகைகளையும், உணவு பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் செய்யத்தொடங்கினால் சிறார்களின் உடல் எடை சீராக இருக்கும். அவர்களின் எதிர்கால ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கையும் கூடும். 

டொக்டர்  K.தாண்டன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29