ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடினின் படம் ஏந்திய நாட்காட்டிகளை அதிக விற்பனை செய்யும் வெளிநாடாக ஜப்பான் பதிவாகியுள்ளது. 

2017 ஆம் ஆண்டிற்கான ரஷ்ய  நாட்காட்டிகளை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிட்டது. இதில் ஒவ்வொரு மாதத்துக்கும் புதினின் வித்தியாசமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவரின் புகழ்பெற்ற வாசகங்கள் ஆங்கிலம் உட்பட 8 மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. 

குறித்த நாட்காட்டிகள் ரஷ்யாவில் மிக அதிகமாக விற்பனையாகின. மேலும் குறித்த நாட்காட்டி, ஜப்பானில் மிக அதிகமான அளவில் விற்பனையாகின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் ரஷ்ய ஜனாதிபதியை விரும்புவது ஜப்பான் அரசை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

ஜனாதிபதி புட்டின் தற்காப்பு கலையான ஜுடோ போட்டியில் பங்கேற்பது, இறக்கைகளை கட்டிக்கொண்டு வானில் பறப்பது போன்ற புகைப்படங்கள், ஜப்பானிய மக்களால் அதிகமாக வாங்கப்பட்டுள்ளன. என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

குறித்த நாட்காட்டியில் புட்டினின் பிறந்தநாளான அக்டோபர் 7ஆம் திகதி மட்டுமே விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.